Loading . . .




காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்; விவசாய கடன் தள்ளுபடி: சத்தீஸ்கரில் காங்., வாக்குறுதி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார். காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்; விவசாய கடன் தள்ளுபடி என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. 

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 90 சட்டசபை தொகுதிகளில், 20 தொகுதிகளுக்கு, நவ., 7ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார். 

வாக்குறுதிகள் என்னென்ன? 

1. காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்,

2. விவசாய கடன் தள்ளுபடி,

3. மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்,

4. நெல் குவிண்டாலுக்கு ரூ.3,200க்கு கொள்முதல் செய்யப்படும்.

5. பீடி இலை சேகரிப்போருக்கு ஒரு மூட்டைக்கு 6 ஆயிரம் விலை, 

ஆண்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் போனஸ் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு அள்ளி வீசியுள்ளது.

பூபேஷ் பாகேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: '' ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். பின்தங்கிய ஜாதியினருக்கு அரசு அவர்களுக்கென ஒரு சிறப்புக் கொள்கையை உருவாக்கும். ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்'' என்றார். 


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News