மகாதேவ் செயலி மற்றும் 21 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நாளை மற்றும் 17ம் தேதி நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. ஆன்லைன் சூதாட்ட ஆப் நிறுவனங்களில், குறிப்பாக மகாதேவ் என்ற சூதாட்ட செயலியின் மோசடி தொடர்பாக, நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. இதை ஏற்று மகாதேவ் உள்ளிட்ட 22 ஆன்லைன் சூதாட்ட ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ளது. சமீபத்தில், சத்தீஸ்கரில் உள்ள மகாதேவ் சூதாட்ட நிறுவனத்தைச் சேர்ந்த 5.39 கோடி, முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு தேர்தல் செலவுக்காக கொடுக்க இருந்த பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.
0 Comments