புது தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தலைநகரில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மேலும் 50% அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களால் விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டிடங்களை இடிப்பது, வாகனங்கள் அதிகளவில் குவிவது ஆகியவை மாசுபாட்டிற்கு பங்களிக்கும் காரணிகளாகும். புதுதில்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் 10 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், ஆறு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை பள்ளி நிர்வாகம் ஆன்லைனில் பாடம் எடுக்க அனுமதிக்கும் என்றும் கல்வி அமைச்சர் ஆதிஷி அறிவித்தார். புது தில்லி காற்றுத் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும், மாசுபடுத்தும் டிரக்குகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் புது தில்லி மற்றும் தேசியத் தலைநகர் பகுதிக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் முடிவு செய்யப்பட்டது.
0 Comments