பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய வழித்தட நகரப்பேருந்து சேவையினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
The Forecast 4 years ago திருச்சி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருச்சிராப்பள்ளி காட்டூரில்
இன்று (3.4.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியமங்கலம் காட்டூர் வழியாக பாப்பாக்குறிச்சி
வரை செல்லும் புதிய வழித்தட நகரப்பேருந்து சேவையினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்
மாவட்ட ஆட்சித் தலைவர் . சு.சிவராசு,இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை மேயர் . ஜி.திவ்யா, வருவாய் கோட்டாட்சியர்
கோ.தவச்செல்வம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் எஸ்.சக்திவேல், முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர் கே.என்.சேகரன், கோட்டத் தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் ஓ.நீலமேகம், துணை மேலாளர்கள்
டி.சதீஷ்குமார், எம்.சுரேஷ்குமார், கிளை மேலாளர் ஆர்.எட்வர்ட் கென்னடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி
அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments