இந்தியா, லிபியாவில் உள்ள காடாமஸ் படுகையின் Area 95/96 பகுதியில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளை கண்டறிந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு ஆயில் இந்தியா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இது அந்த பகுதியில் கண்டறியப்பட்ட 5வது முக்கிய எண்ணெய் வளமாகும்.
சோதனை முடிவுகளின்படி, தினசரி சுமார் 13 மில்லியன் கன அடி எரிவாயு மற்றும் 327 பீப்பாய் கன்டென்சேட் உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்த திட்டம், உலகளாவிய எரிசக்தி துறையில் இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வளங்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த கண்டுபிடிப்பு, இந்தியாவின் எரிசக்தி ஆராய்ச்சி வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
0 Comments