இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி, இருநாடுகளின் வர்த்தக உறவுகள் வலுப்பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 8,284 இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்தில் முழுமையான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் 100% ஏற்றுமதி பொருட்கள் அந்நாட்டில் வரியின்றி நுழைய முடியும். மேலும், வரி விதிப்பு நடைமுறைகள் மற்றும் தொழில்துறை பிரிவுகள் குறித்த விதிமுறைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலாக, இந்தியா நியூசிலாந்தின் சுமார் 30% பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதில் மரம், கம்பளி, ஆட்டு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத தோல் போன்ற பொருட்கள் அடங்கும்.
இந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை எளிதாக்கும் என்றும், வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
0 Comments