அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் ஈரானுக்கு பயணம் செய்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
அவர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் உடன் சந்தித்து பிராந்திய நிலைமை மற்றும் நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு, அமைதி முயற்சிகளை முன்னெடுக்க ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் இன்றி முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, மேலதிக ஆலோசனைகள் நடத்தும் நோக்கில் ஆசிம் முனீர் ஈரானுக்கு சென்றுள்ளார்.
இந்த சந்திப்பு மூலம் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைப்பதற்கான வழிகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை பேச்சுவார்த்தையின் இறுதி முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், தொடர்ச்சியான இந்த ஆலோசனைகள், அமைதி நிலையை உருவாக்கும் முயற்சிகளில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன.
0 Comments