Loading . . .




ஐ.நா. எச்சரிக்கை: ஈரான் மீது டிரம்ப் கருத்துக்கு கவலை

Janani G 1 week ago உலக செய்திகள்


அன்டோனியோ குதேரரேஸ், டொனால்ட்  டிரம்ப் வெளியிட்ட ஈரான் தொடர்பான கடுமையான கருத்துகள் குறித்து கவலை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் மின்நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறியதை ஐ.நா. கவனத்துடன் பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்களை அனைத்து தரப்பும் கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகள், குறிப்பாக மின்சாரம் தொடர்பான வசதிகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவர உரையாடல் மற்றும் தூதரக முயற்சிகள் அவசியம் என குதெரஸ் மீண்டும் வலியுறுத்தினார். அனைத்து நாடுகளும் போருக்கு பதிலாக அமைதியான தீர்வை தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை குறித்து நிலைமை கவனிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அமைதி நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News