தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எடையுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன.
புதிய அறிவிப்பின்படி, அனுமதிக்கப்பட்ட எடை வரம்பை மீறும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். ஆனால், கூடுதல் எடை 10 சதவீதத்திற்குள் இருந்தால் அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவீதத்தை கடந்தால் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், 40 சதவீதத்தை மீறும் அளவிற்கு அதிக எடை இருந்தால், நான்கு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டணங்கள் அனைத்தும் ‘ஃபாஸ்டேக்’ முறையின் மூலம் மட்டுமே வசூலிக்கப்படும். இதனால் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகமான செயல்முறை உறுதி செய்யப்படும்.
இந்த நடவடிக்கை, நெடுஞ்சாலைகளில் அதிக எடை வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் சாலை பாதுகாப்பையும் உட்கட்டமைப்பு பாதுகாப்பையும் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments