தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு பின், லோக் சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543 இலிருந்து 850 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் நிர்வாக தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதே நேரத்தில், மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை செயல்படுத்த தேவையான சட்ட மாற்றங்களுக்கு இந்த தொகுதி உயர்வு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள், ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த முயற்சி அதிகமான மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
0 Comments