மகளிருக்கு 33% ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு புதிய இட அதிகரிப்பு திட்டத்தை முன்வைத்துள்ளது. 2029 பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் படி, லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை 543 இலிருந்து 816 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் 273 புதிய இடங்கள் உருவாகும். மொத்த இடங்களில் 33% ஆகும் 273 இடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்படும். இதே முறை மாநில சட்டமன்றங்களிலும் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திரா மோடி , கேரளாவில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, புதிய இடங்களை உருவாக்குவதன் மூலம் தற்போதைய உறுப்பினர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் மகளிருக்கு பிரதிநிதித்துவம் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கேரளாவில் லோக்சபா இடங்கள் 20 இலிருந்து 30 ஆகவும், உத்தர பிரதேசத்தில் 80 இலிருந்து 120 ஆகவும் அதிகரிக்கப்படலாம். அதில் ஒரு பகுதி மகளிருக்காக ஒதுக்கப்படும்.
தற்போதைய பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீடும் தொடரும். அதில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்காக வழங்கப்படும்.
இந்த திட்டம், மகளிர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
0 Comments