இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மறைவு திறன் கொண்ட போர்க்கப்பல் ஐஎன்எஸ் தரகிரி இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3, 2026 அன்று விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கப்பலை இந்திய கடற்படை யில் சேர்த்தார். இது ‘ஆத்மநிர்பர்’ முயற்சிக்கு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறைத் தலைமை அதிகாரி அனில் சௌஹான் மற்றும் கடற்படைத் தலைமை அதிகாரி தினேஷ் கே திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கப்பல் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டதால், எதிரிகளால் எளிதில் கண்டறிய முடியாத திறன் கொண்டது. மேலும், இது பல்வேறு போர்திறன்களுடன் செயல்படக்கூடியதாக உள்ளது.
இந்த இணைப்பு, இந்தியாவின் கடல் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கியமான கட்டமாகும்.
0 Comments