Loading . . .




காற்று மாசு தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ.10,000 அபராதம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தலைநகர் தில்லியில் காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண் தகடு வாகன அமைப்புகளை ஒரு வார காலத்திற்கு செயல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.  குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதிக்கப்படும் இப்பிரச்னையை எதிர்த்து, வாகன போக்குவரத்து மற்றும் கட்டுமான பணிகளுக்கு, அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.  வாகனப் பயன்பாட்டைக் குறைக்க 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த முறை நவம்பர் 13 முதல் 20 வரை அமலில் இருக்கும்.டெல்லியில் காற்று மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News