3 குற்றவியல் மசோதாக்கள் வரைவு அறிக்கையை நாடாளுமன்ற குழு ஏற்பு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
கடந்த ஆகஸ்டில், மூன்று குற்றவியல் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன: ஐபிசிக்கு பதிலாக பாரதிய நியாய சம்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாக்ரிக் சுரக்ஷா மற்றும் இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய சக்ஷ்யா. இந்த மசோதாக்கள் பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்றக் குழு தயாரித்துள்ளது. மூன்று மசோதாக்களுக்கான வரைவு அறிக்கையை குழு ஏற்றுக்கொண்டது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதை வாசிக்க கூடுதல் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
0 Comments