பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான 302 பெண் தேர்வர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர்
S. Shanmuganathan 2 years ago காவல் துறை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நடைபெற்றது அதில் பலர் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 302 பெண் தேர்வர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனைக்கும், நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். இந்த தேர்வில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று உடற்தகுதி தேர்வு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், இ .கா.ப மேற்பார்வையில், மாநகர காவல் ஆணையர் மகேஸ்வரி இ.கா.ப தலைமையில் நடைபெற்றது.
இதற்கான பணிகள் துணை ஆணையர்கள் அனிதா, சரவணகுமார் உள்ளிட்டோர் கண்காணிப்பில் நடைபெற்றது. இந்த உடல் தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடக்கிறது.
0 Comments