Loading . . .




நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

The Forecast 3 years ago காவல் துறை

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை செயலர் பி.அமுதா நேற்று பிறப்பித்த உத்தரவு: தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவுகூடுதல் டிஜிபியாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், தலைமையிட கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்

ஆவடி காவல் ஆணையராக இருந்த ஏ.அருண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகபணியமர்த்தப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த கே.சங்கர், ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ளகே.ஏ.செந்தில் வேலன், உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமை டிஜிபி சைலேந்திர பாபு வரும் ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கான அறிவிப்பும், அதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான அறிவிப்பும் ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.

0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News