பிகாா்: ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்த விரைவில் சட்டம்: நிதீஷ் குமாா்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), பட்டியல் சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) ஆகியோருக்கு 50% இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் திட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரின் மொத்த மக்கள்தொகையில் OBC மற்றும் EBC கள் 63%, உய்ஜாதி மக்கள் 10%, SC 19.65%, மற்றும் ST 1.68% என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மீது பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தாக்கல் செய்தார். 50% இடஒதுக்கீட்டை அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு 65% ஆக மாற்ற குமார் இலக்கு வைத்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், வறுமையில் உள்ள 94 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் அவர் முன்மொழிகிறார். வரும் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைத்தால், பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். என்று கூறினார்
0 Comments