நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகளை அரசு வழங்கியுள்ளது : பிரதமர் மோடி
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்ட மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. சத்னாவில் ஏழை மக்களுக்கு 1.32 லட்சம் வீடுகள் கிடைத்துள்ளன என்றார். ஏழைகளுக்கு நான்கு கோடி வீடுகளை உருவாக்கி கொடுத்துள்ளதாகவும், ஆனால் அவர் தனக்கென ஒரு வீட்டைக் கூட கட்ட வில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் இந்தியாவின் புகழ் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட மோடி, இன்று இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்று மத்திய பிரதேசத்தில் மோடி பிரசாரம் செய்தார்.
0 Comments