சென்னையில் புதிய சூச்னா பவனை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் திறந்து வைத்தார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னையில் புதிய சூச்னா பவனை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தூர்தர்ஷனுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15ஆம் தேதி விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் கூறினார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார். தமிழகத்தில், 12,500 கிராமங்கள் மற்றும் 1455 வட்டாரங்களில் யாத்திரை செல்கிறது. யாத்திரை அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி நிறைவடையும் என்று அமைச்சர் கூறினார்.
நாட்டில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார். மீனவர்கள் விவகாரம் தொடர்பான மற்றொரு கேள்விக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது என்றார்.
0 Comments