சென்னை வானிலை ஆய்வு மையம் : தமிழகதில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது
The Forecast 2 years ago வானிலை நிலவரம்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 14ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments