Loading . . .




தெலங்கானா தேர்தல் 4700 பேருக்கு மேல் பேர் வேட்புமனு தாக்கல்

The Forecast 2 years ago தெலுங்கான

தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது, முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது.  பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.  வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி பரிசீலிக்கப்படும். ஆளும் பிஆர்எஸ் கட்சி 119 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 111 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.  கஜ்வெல் தொகுதியில் அதிகபட்சமாக 145 பேரும், மேச்சலில் 116 பேரும், நாராயணபேட்டையில் 19 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  அக்டோபர் 9ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நவம்பர் 11ம் தேதி வரை ரூ.544 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.119 தொகுதிகளில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

0 Comments

Post your comment here

தெலுங்கான Relateted News