ரூ.24,000 கோடியில் பிஎம் பிவிடிஜி என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது : பிரதமர் நரேந்திர மோடி
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி
புதிய திட்டமான பழங்குடியினர் சமூக மேம்பாட்டுக்கான பிரத்யேக பிஎம் பிவிடிஜி (குறிப்பிட்ட மிகவும் பின்தங்கிய பழங்குடியின குழுக்கள்) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்ற பழங்குடியின தலைவர்களை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி ஜன்ஜாதியா கவுரவ் திவஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள சுமார் 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 22,544 கிராமங்களில் (220 மாவட்டங்கள்) மிகவும்பாதிப்புக்கு உள்ளான பழங்குடியினத்தை சேர்ந்த 75 குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன இவர்களுக்கு 9 அமைச்சகங்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திட்டத்தின் அடிப்படையான நோக்கம் தொலைதூர, எளிதில் அணுக முடியாத பிவிடிஜி குடும்பங்களுக்கு, சாலை, தொலைத் தொடர்பு இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம், மேம்பட்ட கல்வி, ஊட்டச்சத்து, நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதே, என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
0 Comments