இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்தநாளை தான் (நவ.14) நாம் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடுகிரோம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமே குழந்தைகள் தான். அவர்கள் சிறு வயதில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் எதிர்கால வாழ்விலும் பிரதிபலிக்கும். எனவே, குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத்தருவதே நம் அனைவரின் கடமை. தங்கள் குழந்தைகளை நல்ல பண்புடனும் , தேச பக்தியுடனும் வளர்க்க வேண்டும்.
பெற்றோரின் கவனதிற்கு :
குழந்தைகளுடன் நெருக்கத்தினை ஏற்படுத்த பெற்றோர்கள் எந்த மாதிரியான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்?
- குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்,
- குழந்தைகள் பள்ளி சென்று வந்த உடன் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை கேளுங்கள். நீங்கள் விரும்பி கேட்டால் தினமும் அவர்கள் தானாக சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்,
- குழந்தைகளை தேவையில்லாமல் திட்டாதீர்கள்,
- பிற குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பேசாதீங்க.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக நிச்சயம் இருக்க வேண்டும்.' ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பது பழமொழி. அந்த ஐந்து வயது என்பது பெற்றோர்களின் அரவணைப்பில் குழந்தைகள் இருக்கக்கூடிய பருவகாலம். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் அறிவுரைகள் எதிர்காலத்தில் ஒரு நல்ல வழிகாட்டுதலாக குழந்தைகளுக்கு அமையும்.
அதற்கான வழிமுறைகள...
- குழந்தைகளுக்கு புன்னகையை சொல்லிக்கொடுங்கள்.
- தானம் செய்வதை சொல்லிக் கொடுங்கள் .
- மரியாதை கொடுத்தல் பற்றி சொல்லிக் கொடுங்கள் .
- தினமும் இதிகாசங்கள் ஒழுக்கநெறிகதைகள் என, தினமும் ஒரு கதை கேட்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.
- முக்கியமாக தைரியத்தை சொல்லிக் கொடுங்கள்.
- ஆயிரம் வேலை இருப்பினும் , குழந்தைகளை வாரம் ஒருமுறையேனும் வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
- குழந்தைகளிடம் நிறைய கேள்வி கேளுங்கள். அதற்கான பதிலை பெறுவதில் ஆர்வம் காட்டுங்கள்.
- குழந்தைகளுக்கு பிடித்தமான கலையை கற்று கொடுத்து உற்சாகம் படுத்துங்கள்.
- அரைமணிநேரம் குழந்தைகளோடு குழந்தையாக உறவாடி மகிழுங்கள்.
எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அறிவாற்றலின் மேம்பட்டு அறநெறியில் பண்பட்டு , கலைகளிலே சீர்பெற்று, புகழேணியின் உச்சியில் உலகமே போற்றக்கூடிய குழந்தைகளாக வருவார்கள். அதைப் பார்த்து பெருமையோடு மகிழக்கூடிய தருணம் கைக்கெட்டும் தொலைவிலே.
இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துகள்.
0 Comments