பண்டிகைக் காலத்தில் 1,700 சிறப்பு ரயில்களில் 26 லட்சம் கூடுதல் பெர்த்களை புக் செய்து சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இந்திய ரயில்வே இந்த பண்டிகைக் காலத்தில் சேவை வழங்கலின் தரத்தில் சமரசம் செய்யாமல் பயணிகளுக்கு அதிகபட்ச வசதியை உறுதி செய்யும் வகையில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 1700 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பண்டிகைக் காலத்தில் 26 லட்சம் பெர்த்கள் கிடைக்கப்பெற்றுள்ளன, இது சாதனை எண்ணிக்கையாகும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசலை சீரமைக்க அரசு ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments