Loading . . .




இந்தியா - ரஷ்யா இடையே இக்லா விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனம் ஒப்பந்தம் கையெழுத்து

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

இந்தியா - ரஷ்யா இடையே இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் வினி யோகம் மற்றும் உற்பத்தி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இக்லா- எஸ் என்ற ரஷ்ய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள இந்த ஏவுகணை சாதனம் வீரர்களால் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஏவுகணை சாதனம் ஆகும். இதனை பயன்படுத்தி தனிப்பட்ட வீரர் ஒருவரே எதிரி நாட்டு விமானம் அல்லது ஹெலிகாப்டரை ஏவுகணையால் சுட்டு வீழ்த்த முடியும். 

இந்நிலையில் இந்த ஏவுகணை சாதனத்தை இந்தியாவுக்கு வழங்குவதுடன் அதனை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமத்தை ரஷ்யா வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா- ரஷ்யா இடையே கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ‘ரோசோபோரோன் எக்ஸ்போர்ட்’ தலைவர் அலெக்சாண்டர் மிகயேவ் கூறும்போது, “நாங்கள்ஏற்கெனவே அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இந்திய தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணை சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளோம்” என்றார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News