பாலஸ்தீன மக்களுக்கு 32 டன் நிவாரணப் பொருட்களுடன் இரண்டாவது IAF விமானத்தை இந்தியா அரசு அனுப்பியது
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் S ஜெய்சங்கர்
பாலஸ்தீன மக்களுக்கான 32 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. சமூக ஊடகப் பதிவில், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் S ஜெய்சங்கர், நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இரண்டாவது IAF C17 விமானம் எகிப்துக்குப் புறப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது என்றார்.
கடந்த மாதத்தில், IAF C-17 போக்குவரத்து விமானம் 38 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்தில் உள்ள அல் அரிஷ் விமானநிலையத்திற்கு சென்றது என்றார்.
0 Comments