தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க உணவு பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகிய 3 துறைகளின் செயலாளர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருமுறை தூக்கி எறியும் 14 பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழக அரசு 2019 ஜனவரியில் அரசாணை வெளியிட்டது.அரசாங்க உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. நிபுணர் குழுவின் நிலை மற்றும் அது எடுக்கும் முடிவுகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய 2010ல் கமிட்டி அமைக்கப்பட்டு, 2018க்கு பின் கூடவில்லை என அரசு வக்கீல் தெரிவித்தார்.வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மூன்று துறைகளின் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 Comments