Loading . . .




ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள  கடிததில் ஓமனில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலிஸை மீட்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில்  ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள நூஹ் மற்றும் யாயா, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்தார். மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் அவர்களிடையே பிரச்சினை நிலவி வந்தது.

இந்நிலையில், பெத்தாலிஸை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அவரை உடனடியாக கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கும்படி பெத்தாலிஸின் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பெத்தாலிஸை மீட்டு, தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News