Loading . . .




டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கும் நிலையில், டிசம்பா் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.குளிர்காலக் கூட்டத்தொடர் 19 நாட்கள் 15 அமர்வுகளாக நடைபெறும்.  மஹுவா மொய்த்ராவை நீக்க பரிந்துரை செய்யும் நெறிமுறைக் குழுவின் அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்யும்.  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று மசோதாக்கள் இந்தத் தொடரின் போது பரிசீலிக்கப்படும்.  தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நிலுவையில் உள்ள மசோதாவும் பரிசீலிக்கப்படும்.  மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News