“ 2024 தேர்தலுக்குப் பின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம்” : மம்தா பானர்ஜி
The Forecast 2 years ago டெல்லி
இண்டியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற உள்ள நிலையில், மம்தா பானர்ஜி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதில், ''இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம். இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, மற்ற கட்சி பற்றி நான் எதுவும் கூற முடியாது. அதேநேரத்தில், இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியோடும் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்து , பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நான் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
0 Comments