24 வாரத்திற்கு மேல் உள்ள கர்ப்பத்தை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி
The Forecast 3 years ago டெல்லி
.
24 வாரத்திற்கு மேல் உள்ள கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி, 24 வாரத்திற்கு மேல் உள்ள கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதுபற்றிய பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன. டெல்லியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பெண், திருமணத்துக்கு பின்னர் கர்ப்பம் தரித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு 'ஸ்கேன்' பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது அவருக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. இப்படிப்பட்ட குழந்தையை பெற்றெடுத்து, அந்த குழந்தை காலமெல்லாம் அவதிகளுடன் மருத்துவ சிகிச்சையை சார்ந்து வாழ்வது மிகக்கொடுமையானது என கருதினார். இதனால் அவர் கருவைக் கலைப்பதற்காக டெல்லி குரு தேக் பகதூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள்தான் கருக்கலைப்பு செய்ய முடியும், அவரது கர்ப்பம் 24 வாரங்களைக் கடந்து விட்டதால் கோர்ட்டின் அனுமதி பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய முடியும் என கூறி விட்டனர்.
இதையடுத்து அவர் கருக்கலைப்புக்கு அனுமதி கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஐகோர்ட்டு விசாரணை தனது கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது, நவம்பர் 12-ந் தேதிதான் தெரிய வந்துள்ளதாக கூறி, தான் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வழக்கில் அந்த பெண் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பிரதிபா எம்.சிங் விசாரித்தார். வழக்குதாரர் தரப்பில் வக்கீல்கள் அன்வேஷ் மதுக்கர், பிராச்சி நிர்வாண் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். விசாரணை முடிந்த நிலையில், வழக்கைத் தொடுத்துள்ள பெண், தனது 33 வார கருவைக்கலைத்துக்கொள்ள அனுமதி அளித்து நீதிபதி பிரதிபா எம்.சிங் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்தப் பெண் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியிலோ அல்லது குரு தேக் பகதூர் ஆஸ்பத்திரியிலோ அல்லது சட்டப்படி அனுமதி பெற்றுள்ள பிற ஆஸ்பத்திரியிலோ கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.

0 Comments