Loading . . .




டிஆர்டிஓவுக்கு புதிய நிதி அதிகாரம்: பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு வேகம்

Janani G 4 hours ago தேசிய செய்திகள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓவின் முக்கிய திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படுவதற்காக, புதிய டிஎஃப்பி-2026 நிதி அதிகாரக் கட்டமைப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புதிய நடைமுறை, பாதுகாப்பு ஆராய்ச்சி திட்டங்களின் செயல்திறன், பொறுப்புணர்வு மற்றும் காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவேற்றும் திறனை மேம்படுத்தும் முக்கிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. 


புதிய கட்டமைப்பின் மூலம், டிஆர்டிஓ உருவாக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களை இந்திய ஆயுதப்படைகளில் விரைவாக கொண்டு வர முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இது ஆத்மநிர்பர் பாரத் இலக்கை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார். 


டிஎஃப்பி-2026 நடைமுறையில், சோதனைப் பணிகள், மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டத்திற்கு முன்பான ஆராய்ச்சிகளுக்கு தனித்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புற ஆராய்ச்சி திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி மற்றும் புதுமை மையங்களுக்கு வழங்கப்படும் மானியங்களுக்கும் தனித்த நிதி அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் திட்ட அனுமதி மற்றும் செயல்படுத்தும் நடைமுறைகள் மேலும் எளிமையடையும். 


இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள், டிஆர்டிஓ தலைமை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். 


இந்த புதிய சீர்திருத்தம், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி துறைக்கு வேகத்தை அளிப்பதோடு, உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியையும் தேசிய பாதுகாப்புத் தயார்நிலையையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News