அரசு ஊழியர்களின் கடமை மற்றும் அசைக்க முடியாத அவர்களின் அர்ப்பணிப்புக்கு நிகரேயில்லை : கூடுதல் தலைமைச் செயலாளர், மின் உற்பத்தி மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.,
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
கூடுதல் தலைமைச் செயலாளர் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.,
தமிழகதில் இம்மாதம், 17, 18 ஆகிய தேதிகளில் அதீத கன மழை துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்தது. இதனால் துாத்துக்குடி, முத்தையாபுரத்தில் உள்ள, 230 கிலோ வோல்ட் துணைமின் நிலையம்; துாத்துக்குடி டவுனில் உள்ள, 110/22 கி.வோ., மற்றும் நாசரேத், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தலா, 33/11 கி.வோ., துணைமின் நிலையங்களை தண்ணீர் சூழ்ந்தது.
மழை வெள்ளத்தால் அனைவரின் பணிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், சிலரின் பணிகளுக்கு எப்போதுமே ஓய்வு இருப்பதில்லை, அதிலும் பேரிடர் காலங்களின் பணிபுரியும் மாவட்ட ஆட்சியர்கள் , அரசு அதிகாரிகள் , தூய்மை பணியாளர்கள் மற்றும் மின் பணியாளர்களின் பங்களிப்பு என்றுமே இன்றியாமையாது. அதன் சான்றாக துாத்துக்குடி டவுன் துணைமின் நிலையத்தில், இளநிலை பொறியாளராக சுதா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் வீடு, துணைமின் நிலையத்தில் இருந்து, 2 கி.மீ. துாரத்தில் உள்ளது. சென்ற திங்களன்று, துாத்துக்குடியில் கன மழை பெய்து, சாலைகளிலும் , வீடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், இளநிலை பொறியாளர் சுதா வீட்டிலும் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்தது.
வெள்ளம் சூழ்ந்த போதிலும் தன் பணி ஓய்வதில்லை என்று ஆறாம் வகுப்பு படிக்கும் தன் இரு குழந்தைகளையும், தாயையும் உறவினர் வீட்டில் விட்டு விட்டு, இடுப்பளவுக்கு தண்ணீரில் நடந்தபடியே துணைமின் நிலையம் வந்து மக்களுக்கு உதவியுள்ளார். பின் இவர் தனது சக ஊழியர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து, மின் வழித்தடங்களில் மின் வினியோகம் நிறுத்துவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.தொடர்ந்து, அவர், இன்றும் துணைமின் நிலையத்திலேயே இருந்து, மின் வினியோக பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தமிழகம் முழுவதும் 5,000த்து க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பொறியாளர்கள், தென் மாவட்டங்களில் கன மழையால் சேதமடைந்த சாதனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாவட்டங்கள் மட்டுமன்றி சென்னை , செங்கல்பட்டு மற்றும் சில மாவட்டங்களின் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்குகில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களின் தியாகங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது.
மேலும் சுதா அவர்களின் கடமை பணியை குறித்து, கூடுதல் தலைமைச் செயலாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., விடுத்த அறிக்கை:
ஐந்து அடி தண்ணீரில் வீடு மூழ்கி இருந்தாலும், உடனே அலுவலகம் வந்து, துணைமின் நிலையத்தில் தங்கி புணிபுரிந்த பெண் பொறியாளரை போல், எங்கள் ஊழியர்களின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு பிரகாசமாக மின்னுகிறது. எங்கள் அனைத்து சுதாக்களுக்கும் மற்றும் எண்ணற்ற அர்ப்பணிப்புள்ள மற்றவர்களுக்கும், மின் வாரியம் மற்றும் என் தனிப்பட்ட நன்றிக்கு எல்லையே இல்லை.
உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கிறது. உங்கள் அர்ப்பணிப்புக்கு மின் வாரியம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும், என்று கூறியுள்ளார்.
0 Comments