காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 2 years ago காஞ்சிபுரம்
தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப.
நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம் கால்வாயில் நீர்வளத்துறை மூலம் ரூ.19.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப. இணைஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், இ.ஆ.ப., நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments