Loading . . .




தெலங்கானா மாநிலத்தில் ரூ.500க்கு மானிய விலை காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்

The Forecast 2 years ago தெலுங்கான

ஹைதராபாத்:

தெலங்கானா மாநிலத்தில் மகாலட்சுமி திட்டம்’ எனும் பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும், ஏழைகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் இலவச மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தையும் ,  200 யூனிட் வரை ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதில் தற்போது ரூ.500க்கே காஸ் சிலிண்டர் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை ரேஷன் அட்டை உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இந்த மானிய விலை காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். மேலும் இதன் மூலம் தெலங்கானாவில் சுமார் 90 லட்சம் குடும்பத்தினர் பயனடைவர்கள் என முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

0 Comments

Post your comment here

தெலுங்கான Relateted News