தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் இ.ஆ.ப தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி நடைபெற்றது
The Forecast 2 years ago தென்காசி
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 219 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி, 220 வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி, 221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி. 222 தென்காசி சட்டமன்றத் தொகுதி, 223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் இ.ஆ.ப தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சதீஷ்குருமூர்த்தி, சித்திக் முகமது அமீர் முகமது இக்பால் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments