Loading . . .




அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்

The Forecast 2 years ago அரியலூர்

மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப.,

அரியலூர் மாவட்டத்தில் சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதி, மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மின்விளக்கு வசதிகள் இல்லாத இடங்களில் உடனடியாக மின்விளக்குகள் ஏற்படுத்திடவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தக்கூடிய சாய்வு தளங்கள் சரியாக இல்லாத இடங்களில் அவற்றை விரைவாக சரிசெய்திடவும், குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இருப்பதை உறுதி செய்திடவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் செயல்பட்டு வரும் வாக்காளர் உதவி மையத்தினை பார்வையிட்டு பதிவேடுகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பரிமளம், தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசைன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

அரியலூர் Relateted News