சுனிதா வில்லியம்ஸ், போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளி பயணம் மேற்கொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் விண்ணுக்கு சுனிதா வில்லியம்ஸ் புறப்பட்டார். இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை இதன் மூலம் அவர் படைத்துள்ளார்.
இந்திய நேரப்படி இரவு 8.22 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் பேரி வில்மோரும் பயணித்தார். ‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. சுமார் ஒரு வார காலம் அவர்கள் இவரும் இந்த விண்கலனின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
59 வயதான சுனிதா வில்லியம்ஸுக்கு இது மூன்றாவது விண்வெளி பயணமாக அமைந்துள்ளது. இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போயிங் ஸ்டார்லைனர்: ஸ்டார்லைனர் விண்கலனை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்தது. இதன் பின்னணியில் சுமார் பத்து ஆண்டு கால உழைப்பு உள்ளது. அதனால் போயிங் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் செயல்தன்மை குறித்த அறிக்கையை கொண்டு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் விண்வெளி சார்ந்த பணிகளுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதன் ஒப்பந்த மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments