Loading . . .




குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியோடு 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த கோலாகல விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

30 கேபினட் அமைச்சர்கள்: 1) ராஜ்நாத் சிங், 2) அமித் ஷா,3) நிதின் கட்கரி, 4) ஜே.பி.நட்டா,5) சிவராஜ் சிங் சவுகான், 6) நிர்மலா சீதாராமன், 7) ஜெய்சங்கர், 8) மனோகர் லால் கட்டார், 9) எச்.டி.குமாரசாமி, 10) பியூஷ் கோயல், 11) தர்மேந்திர பிரதான், 12) ஜிதன்ராம் மாஞ்சி, 13) ராஜீவ்ரஞ்சன், 14) சர்வானந்த சோனோவால், 15) வீரேந்திர குமார், 16) ராம்மோகன் நாயுடு, 17) பிரகலாத் ஜோஷி, 18) ஜோயல் ஓரம்,19) கிரிராஜ் சிங், 20) அஸ்வினி வைஷ்ணவ், 21) ஜோதிர் ஆதித்ய சிந்தியா, 22) பூபேந்திர யாதவ், 23) கஜேந்திர சிங் ஷெகாவத், 24) அன்னபூர்ணா தேவி, 25) கிரண் ரிஜுஜு, 26) ஹர்தீப் சிங் புரி, 27) மன்சுக் மாண்டவியா, 28) கிஷன் ரெட்டி, 29) சிராக் பாஸ்வான், 30) சி.ஆர்.பாட்டீல்.

5 இணையமைச்சர் (தனி பொறுப்பு): 31) ராவ் இந்திரஜித் சிங், 32) ஜிதேந்திர சிங், 33) அர்ஜுன் ராம்மேக்வால், 34) பிரதாப் ராவ் கண்பத்ராவ் ஜாதவ், 35) ஜெயந்த் சவுத்ரி.

36 இணை அமைச்சர்கள்: 36) ஜிதின் பிரசாத், 37) ஸ்ரீபாதஎஸ்ஸோ நாயக், 38) பங்கஜ் சவுத்ரி, 39) கிஷன் பால், 40) ராம்தாஸ் அத்வாலே, 41) ராம்நாத் தாக்குர், 42) நித்யானந்த் ராய், 43) அனுபிரியா படேல், 44) சோமண்ணா, 45) பெம்மசானி சந்திரா, 46) எஸ்.பி.சிங் பாகேல், 47) ஷோபா கரந்த்லே, 48) கீர்த்தி வர்தன் சிங், 49) பி.எல். வர்மா, 50) சாந்தனு தாக்குர், 51) சுரேஷ் கோபி, 52) எல். முருகன், 53) அஜய்தம்தா, 54) பண்டி சஞ்சய் குமார், 55) கமலேஷ் பாஸ்வான், 56) பாகிரத் சவுத்ரி, 57) சதீஷ் சந்திர துபே, 58) சஞ்சய் சேத், 59) ரவ்நீத் சிங் பித்து, 60) துர்கா தாஸ், 61) ரக்சா கட்சே, 62) சுகந்த மஜும்தார், 63) சாவித்ரி தாக்குர், 64) டோகன் சாகு, 65) ராஜ் பூஷண் சவுத்ரி, 66) பூபதி ராஜு சீனிவாச வர்மா, 67) ஹர்ஷ் மல்ஹோத்ரா, 68) நிமுபென் பம்பானியா, 69)முரளிதர் மோகல், 70) ஜார்ஜ் குரியன், 71) பபித்ரா மார்கிரிட்டா ஆகியோர் அடுத்தடுத்து பதவியேற்றனர்.

மேலும் இந்தியா அமைச்சர்களில் 27 பேர் ஓபிசி, 10 பேர் எஸ்சி, 5 பேர் எஸ்டி, 5 பேர் சிறுபான்மையினர் ஆவர். 24 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

இப்பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் பிரசண்டா, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மைப் பணியாளர்கள், 3-ம் பாலின பிரதிநிதிகள், புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பெண் ரயில் ஓட்டுநர்கள், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, நடிகர்கள் ரஜினி காந்த், ஷாருக்கான், அக்சய் குமார், அனில் கபூர், அனுபம் கெர் உட்பட 8,000 சிறப்பு விருந்தினர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News