Loading . . .




காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாகவும், இது பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் ஐ.நா. வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்று வரை மோதல் ஏற்பட்டடு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது. மேலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் இஸ்ரேலின் பங்கு முக்கியமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

மேலும், இது இனப்படுகொலையின் ஒரு வடிவம். இதனால் காசா முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா வல்லுநர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐ.நா தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா-வின் உணவுக்கான உரிமை சார்ந்த சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி உட்பட ஐ.நா வல்லுநர்கள், காசாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News