செஸ் விளையாட்டில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் தொழில்நுட்ப திட்டங்களை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
சென்னை:
உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தொழில்நுட்ப உந்துதல் திட்டங்களை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐஐடி-ன் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics - CESSA), தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடி-ன் விளையாட்டுக் கல்விக்கான எதிர்காலத் திட்டம் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்), மற்றும் சென்னை ஐஐடி செஸ்ஸாவின் தலைவர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை சென்னை ஐஐடி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. விளையாட்டுக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி, செஸ் விளையாட்டுக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை செஸ் கூட்டமைப்புகளுக்கு வழங்குகிறது. விளையாட்டுக் கல்வியை மேம்படுத்துதல், விளையாட்டு சுற்றுச்சூழலின் அனைத்து மட்டங்களிலும் திறமைகளை வளர்த்தல், செஸ் உலகில் இந்தியாவின் இடத்தை மேலும் உயர்த்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் எங்களின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏஐஎம்எல், டேட்டா சயின்ஸ் சான்றிதழ் படிப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி எதிர்காலத்தில் இளங்கலை விளையாட்டு அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
0 Comments