Loading . . .




பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் அரசியல் அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிப்பு 

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

“பிஹாரில் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளிலும் ஜன சுராஜ் போட்டியிடும். இதில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள்” என ‘ஐ-பேக்’ அமைப்பின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிஹார் மாநிலம் முழுவதும் தற்போது அவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022, அக்டோபர் 2-ம் தேதி இதனை அவர் தொடங்கினர். இதுவரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இதில் சுமார் 5,000 கிலோ மீட்டர்களை கடந்துள்ளார். முன்னதாக, வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று தங்களது ஜன சுராஜ் அரசியல் அமைப்பு அரசியல் கட்சியாக உதயமாகும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தேர்தல் வியூகம் சார்ந்த திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ‘ஐ-பேக்’ அமைப்பின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்துள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News