Loading . . .




சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்துடன் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்தை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா – சிங்கப்பூர் கூட்டாண்மைக்கு தர்மன் அளித்து வரும் உணர்வுபூர்வமான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த விஷயத்தில், இந்த உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்துவது, கூட்டு ஒத்துழைப்புக்கான வலுவான முன்னோக்கிய பாதையை வகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேம்பட்ட உற்பத்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய துறைகளில் இந்தியாவும், சிங்கப்பூரும் தங்களது ஒத்துழைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்த எண்ணங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அடுத்த ஆண்டு, இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் தர்மனை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News