Loading . . .




5ஜி மொபைல் சந்தையில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா தற்போது 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. முதலிடத்தை சீனா தக்கவைத்துள்ளது.

2024-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய 5ஜி மொபைல் ஏற்றுமதி 20 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதில் ஆப்பிள் 5ஜி மொபைல்போன் முக்கிய பங்கை வழங்கியது. மொத்த வளர்ச்சியில் ஆப்பிள் மட்டும் 25 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளது.  மேலும், சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ், எஸ் 24 சீரிஸ் 21 சதவீத பங்கை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. 2024 முதல் பாதியில் 5ஜி மாடல்களுக்கான டாப் 10 பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் மாடல்கள் தலா ஐந்து இடங்களைப் பிடித்தன. ஆப்பிள் முதல் 4 இடங்களைப் பிடித்தது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியங்களிலும், 5ஜி கைபேசி ஏற்றுமதி வளர்ச்சியைக் கண்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News