ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் கர்னல் நகர மேயரும், சதவுரா தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான ரேணு பாலாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.
0 Comments