Loading . . .




வெளிநாடுகள், உள்நாட்டுப் பயணங்களை திட்டமிடும் பிரதமர் கவனமாக மணிப்பூரைத் தவிர்த்து வருகிறார் : காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2023ம் ஆண்டு மே 3-ம் தேதி மணிப்பூர் பற்றி எரியத் தொடங்கியது. 2023, ஜூன் 3-ம் தேதி கலவரம் மற்றும் வன்முறைக்கான காரணம் மற்றும் பரவல் குறித்து விசாரணை நடத்த மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் குழு எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. அதற்கான கால அவகாசம் 2024 நவம்பர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மணிப்பூர் மக்களின் துன்பமும், துயரமும் இன்னும் தொடர்கிறது. நமது பிரதமர் நாட்டின் பிறபகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார். ஆனால் சிக்கலுக்குள் இருக்கும் மாநிலத்துக்குச் செல்வதை கவனமுடன் தவிர்த்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News