Loading . . .




டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்

The Forecast 1 year ago டெல்லி

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்’’ என்றார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேஜ்ரிவால் இவ்வாறு அறிவித்தார். இதன்படி இன்று அவர் பதவியை ராஜினாமா செய்கிறார். டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவை இன்று மாலை 4.30 மணிக்கு கேஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது ராஜினமா கடிதத்தை அவர் அளிக்க உள்ளார்.

0 Comments

Post your comment here

டெல்லி Relateted News