ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 239 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
2 தொகுதிகளில் போட்டி: இத்தேர்தலில் களம் காணும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மத்திய காஷ்மீரில் உள்ள இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மூன்று தலைமுறைகளாக அப்துல்லாவின் குடும்பத்தார் வாகைசூடிய கந்தர்பால் தொகுதி அதில் ஒன்றாகும். மற்றொரு தொகுதியான புட்காமில் மக்கள் ஜனநாயக கட்சியின் சையத் முன்தஜீர் மெஹ்தி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சியின் அகா சையத் அகமது மூஸ்வி ஆகியோரை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
0 Comments