ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் காங்கிரஸ் 65 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பாஜக 17 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. ஆனால், காலை 9.30 மணிக்கு பிறகு காட்சிகள் மாறி, இரு கட்சிகளும் சமபலத்துடன் இருந்தன. காலை 11 மணி அளவில் பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற, காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. இதே நிலை கடைசிவரை நீடித்தது.
ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
0 Comments