3வது முறையாக ஹரியானாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி, செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
தொடர்ந்து 3-வது முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் நயாப் சிங் சைனி, லாட்வா தொகுதியில் போட்டியிட்டார். அவர் 16,054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும், அவரது அரசில் இடம்பெற்றிருந்த 8 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர்.
மேலும் முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி, செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் நயாப் சிங் சைனி கூறியபோது, ‘‘ஹரியானாவின் 2.80 கோடி மக்களுக்கும் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன். பாஜகவுக்கு ஆதரவாக விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் வாக்களித்துள்ளனர். தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் முன்னேறி செல்வோம். பிரதமர் செல்போனில் தொடர்புகொண்டு ஆசி வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார். முதல்வராக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி சமூக வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் வழங்கி உள்ளனர். இது நல்லாட்சி, வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி. மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற அயராது பாடுபடுவோம் என்றார்.
ஹரியானாவில் காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
0 Comments